பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! திருவள்ளூரில் நடந்த கொடூரம்
சோழவரம் அருகே பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் இயங்கி வரும் பள்ளிவாசலில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரபி மொழியில் குரான் பயின்று வருகின்றனர். பள்ளிவாசலுக்கு வந்து அரபி பயிலும் சிறுமிகளுக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பள்ளிவாசல் அரபி ஆசிரியர் காரனோடையை சேர்ந்த முகமது ஆசிப் (32) போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.