பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை - விசாரணைக்கு ஆஜராகாத மாஜி சிறப்பு டிஜிபி

 
v

 பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.   இதையடுத்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.   அவருக்கு உதவியாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வ்

 இது குறித்த விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.    நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் இன்று நடந்த விசாரணையில்,   குற்றம் சாட்டப்பட்ட  முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.  முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி மட்டும் ஆஜராகியிருந்தார்.

 குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முக்கிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.  இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.