பாலியல் வன்கொடுமை- கைது செய்யப்பட்ட நபர் குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்

 
anna university

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

anna

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவரும். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திய பின், இருவரும் நடை பயிற்சி சென்றுள்ளனர். அங்கு ஒரு மறைவான இடத்துக்கு சென்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இருவர் மாணவரை அடித்து விரட்டி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி, நீண்ட ஆலோசனைக்கு பின் நேற்று இரவு கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

rape

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் (37) என்ற நடைபாதை பிரியாணி கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியல் பூர்வமான ஆதரங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், ற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும் போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஞானசேகரன் தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது