பாலியல் புகார்- ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி நீக்கம்
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் தனக்கு சில காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மற்றொரு பெண் நடன இயக்குனர் (21) போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படம் ஷீட்டிங்கில் இருந்தபோதும், நர்சிங்கியில் உள்ள தனது வீட்டிலும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், ராயதுர்கம் போலீசார் ஜூரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். ஜானி மீது 376 (கற்பழிப்பு), குற்றவியல் மிரட்டல் (506) மற்றும் காயப்படுத்துதல் (323) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தேர்தலுக்கு முன்னதாக ஜனசேனா கட்சியில் இணைந்த ஜானி மாஸ்டர் ஜனசேனா கட்சி தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாணின் தீவிர ரசிகராவார். 2024 தேர்தலில் ஜனசேனா கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்றார். அந்த கட்சி கூட்டணி வேட்பாளர்கள் சார்பில் ஜானி மாஸ்டர் தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டார். இந்நிலையில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் எதிரொலியாக ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.