அமலாக்கத்துறை வழக்கில் அக்.4-ஆம் தேதி செந்தில்பாலாஜி ஆஜராக உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் 4-ம் ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிபதி முன்பு நேரில் ஆஜரானார். அப்போது, குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்திலே பணிபுரிந்த வங்கி ஊழியர்களின் விவரங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தாக்கல் செய்யபட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், இந்தமனுவை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் பிரிவின் உதவி இயக்குனர் மணிவன்னன் உடல் நிலை காரணமக ஆஜராகவில்லை என்றும், அதுதொடர்பான மருத்துவ சான்றிதழை கடந்த விசாரணையின் போது தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கெளதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையின் பதில்மனுவை ஏற்க கூடாது என்றும், வங்கி ஊழியர்களின் விவரங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையடுத்து, அரசு தரப்பு சாட்சியான மணிவண்ணனுக்கு வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 4ம் தேதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பாதாக தெரிவித்துள்ளார்.