செந்தில் பாலாஜி இன்று விடுதலையாவதில் சிக்கல்
செந்தில் பாலாஜி இன்று விடுதலையாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வந்த சூழலில் சற்று நேரத்திற்கு முன் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி ஜாமீன் உத்தரவு கிடைத்ததும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த சில மணி நேரங்களில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி இன்று விடுதலையாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவில் சில தகவல் தேவை, பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை. ஆகவே உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன், செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்துள்ளார்.