செந்தில்பாலாஜி காவல் ஜூலை 18 வரை நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் அஜர்படுத்த்ப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 47-வது முறையாக ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைதாகி ஓராண்டாகியுள்ள அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. என்பது குறிப்பிடதக்கது.