"பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்; முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றி"- செந்தில் பாலாஜி

 
"பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்; முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றி"- செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று காலை நிபந்தனை ஜாமின் வழங்கியது. 

இதனைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் 25 லட்ச ரூபாய்க்கான பிணைத்தொகை மற்றும் இருவர் உத்தரவாதம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் பினையாணை புழல் மத்திய சிறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. காலை முதலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பதற்காக புழல் மத்திய சிறை வளாகத்தில் குவிந்த திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் செந்தில்பாலாஜியை கண்டதும், பூக்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கை, சட்டரீதியாக எதிர்கொண்டு மீண்டு வருவேன். சட்டபோராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி! என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்.