செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

 
செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Image


முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் கிடைக்காமல் நீதிமன்ற காவல் 50 முறைக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், ஓராண்டுக்கும் மேலாக  சிறையிலேயே காலம் தள்ளி வருகிறார். இதற்கிடையில் பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணைகள் சுமார் 6 மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.