செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், பலமுறை ஜாமின் கோரி அவர் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஒராண்டுக்கும் மேலாக சிறையிலேயே காலம் தள்ளி வரும் அவர், பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்த இந்த ஜாமின் வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12 ஆம் நடைபெற்றது.
இந்நிலையில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதில் அளித்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது. தேவைப்பட்டால் கூடுதலாக கருத்துகளை வெள்ளிக்கிழமை வழங்குவதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார். மத்திய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.