முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்?- செங்கோட்டையன் பேட்டி

 
முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்?- செங்கோட்டையன் பேட்டி

முதலமைச்சரைப் பொறுத்தவரை, முடிவுகளைத் தரும் செயல்பாடுகளே முக்கியம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்புப்படைகள் தயார் நிலையில் உள்ளது. மலை மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டால் மக்களை மீட்க ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. செய்தியாளர்களை சந்திப்பதை விட செயல்பாடுகள் மூலமாக பேசவே முதலமைச்சர் விரும்புகிறார். சொன்னதை செய்கிறோமா? என்பதை தான் முதல்வர் பார்க்கிறார். முதல்வர் செய்தியாளரை சந்திக்காதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மை துறைக்கு நாம் கேட்ட ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு முன் கூட்டியே வழங்கிவிட்டது. நாம் கேட்ட நிதியை முன்னெச்சரிக்கையாகவே மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து முதலமைச்சர் விஜய் முடிவு எடுப்பார். த.வெ.க.வில் பார் நாகராஜை சேர்க்கவில்லை.. என்னைப் பற்றி பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என்னை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். அப்போது பார் நாகராஜ் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நேரில் சந்தித்துள்ளார். இணையவழியில் விண்ணப்பிக்கப்படும் அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஐந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்றார்.