இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?- சீமான் காட்டம்

 
தவெக மாநாட்டிற்கு குவியும் தொண்டர்கள்.. “நாட்டில் பலர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதை காட்டுகிறது” - விஜய்யை சீண்டிய சீமான்..!!

செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் ்தமிழ், தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?  செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.

உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும்  உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில  
இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே! அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.