“தம்பி விஜய்யும் பேசியிருக்கிறது மகிழ்ச்சி... வரவேற்கிறேன்” - சீமான்
நான் முன் வைத்த அந்த கோரிக்கை வலுப்பெறுகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை கைது செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் முன்பிணை எடுத்திருப்போம், அதேபோல் கைதுக்கு பின் பிணைக்கு நாங்கள் முயற்சி செய்யும் போது குண்டாஸ் போட்டு விட்டது திமுக அரசு.
நான் 2 நாட்களுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து உளுந்தூர்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினேன். அதை பற்றி எத்தனை கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டீர்கள்? விஜய் பேசியதற்கு மட்டும், ஒரு சீட்டு எடுங்கனு கிளி ஜோசியக்காரன் மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்... விஜய்க்கு முன்னாடி மாநில அந்தஸ்து கோரியது நான்தான். மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும் என்று நான் தான் முதன்முதலில் புதுச்சேரிக்காக குரல் கொடுத்தேன். அதுக்கு அப்புறம்தான் ரங்கசாமியே போய் மனு கொடுத்தார். நான் முன் வைத்த அந்த கோரிக்கை வலுப்பெறுகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி” என்றார்.


