“நாங்க போட்டியிடத்தான் இடைத்தேர்தலே நடத்துறாங்க..”- சீமான்

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது யுஜிசி நெட் தேர்வு அறிவித்தால் தேசப்பற்று வருமா ?அல்லது தேச வெறுப்பு வருமா ? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தை ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளே தமிழர்களின் கலாச்சார மாதமாக கொண்டாடி வரும் நிலையில் பறந்து விரிந்த இந்த இந்திய திருநாட்டில் தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் போது யுஜிசி நெட் தேர்வை அறிவித்தால் எங்களுக்கு தேசப்பற்று வருமா? அல்லது தேச வெறுப்பு வருமா?

புதிய கல்விக் கொள்கையை திணிக்க நினைப்பதை ஏற்க முடியாது, புதிய கல்விக் கொள்கையில் வ.உ.சி சிதம்பரனார் பற்றி பாடம் இருக்காது. ஆனால் வல்லபாய் பட்டேல் பற்றிய பாடம் இருக்கும். அதனால் தான் புதிய கல்விக் கொள்கை திணிக்கப்படுகிறது. எப்படி புதிய கல்விக் கொள்கையை திணித்தாலும் அதனை ஏற்க முடியாத. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலே நாங்கள் போட்டியிடுவதற்காக தான் கொண்டுவரப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக போட்டியிடும்” என்றார்.