சீமான் ஒழிக! சீமான் ஒழிக! பசும்பொன்னில் பரபரப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழாவும் 62வது குருபூஜை விழாவும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 30 ஆம் தேதி பசும்பொன்னில் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சசிகலா , காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வ பெருந்தகை, மதிமுக சாரபில் துரை வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துத்தினார்கள். முன்னதாக சீமான் ஏற்கனவே பாண்டிய மன்னர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக சிலர் கோஷமிட்டது சலசப்பை ஏற்படுத்தியது.
சீமான் ஒழிக சீமான் ஒழிக !! பசும்பொன்னில் சீமானுக்கு எதிர்ப்பு pic.twitter.com/FwbYEeNUwJ
— கபிலன் (@_kabilans) October 30, 2024
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தேர்தலில் போட்டியிட்டபோது தொகுதிக்கே போகாமல் வெற்றி பெற்றவர் முத்துராமலிங்க தேவர். பால் விற்பதைபோல் இந்த மக்கள் தண்ணீரை விற்பார்கள். விளைநிலங்களையெல்லாம் வீட்டுமனைகளாக்கிவிடுவார்கள். புறாக்கள் கூடு கட்டி வாழ்வதைபோல் இந்த மக்கள் வாழ்வார்கள் என இன்றுள்ள நிலையை அன்றே கணித்தார் என் தாத்தா முத்துராமலிங்க தேவர். ஆன்மிகத்தில் ஊறித்திளைத்த உத்தமர்.. உடைமைகளை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த வள்ளல்” என புகழாரம் சூட்டினார்.