கேள்வி கேட்டால் ஆன்டி இந்தியன் என்கிறார்கள்- சீமான்
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில், தமிழர்களை நியமிக்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை ஏற்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளது, தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பு. இறையன்புக்கு பிறகு தமிழர் ஒருவரை தலைமைச் செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாடு அரசிற்கு உளப்பூர்வமான பாராட்டுகள். முருகானந்தத்தின் உண்மையும், நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்நியமனத்தைக் கருதுகிறேன்.
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் பல கிராமங்களில் மின்சாரமே இல்லை. கேள்வி கேட்டால் ஆன்டி இந்தியன் என்கிறார்கள். பள்ளியில் மாணவர்களுக்கு கழிவறை இல்லை... பல நூறு கோடியில் கார் பந்தயம் எதற்கு?” எனக் கேள்வி எழுப்பினார்.