தலித்கள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன்- சீமான்

 
சீமான்

தலித்கள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..


சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எதிர்கருத்து, மாற்று கருத்து இருக்ககூடாது என சொல்வது எப்படி ஜனநாயகம். சர்வாதிகாரம் கூட இல்லை. கொடுங்கோல் ஆட்சி. ஜனநாயக நாடு என்பது வெற்றுவார்த்தை திடீரென விஜய் திமுகவில் சேருகிறேன் என்றால் விட்டு விடுவீர்களா..? விஜய் மாநாட்டுக்கு இடையூறு ஏற்படும். தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்க இடம் கிடைக்காது. தனியார் இடம் என்றால் உரிமையாளரை ஆட்சியாளர்கள் மிரட்டுவர். அனைவரும் பிரச்சனை இல்லாமல் வாழதான் ஆசைப்படுவார்கள்.


தலித்கள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன். ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறேன். விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? இது சர்வாதிகாரம் என்று கூட சொல்ல முடியாது. கொடுங்கோன்மை என்றுதான் சொல்ல வேண்டும். சவுக்கு சங்கர் மீதான குண்டர்சட்டம், கொடுஞ்செயல், இழிவான அரசியல் பழிவாங்கல். அரசு சாராயம் விற்கிறது.. அப்போது யார் மீது குண்டர் சட்டம் போடுவது?” எனக் கேள்வி எழுப்பினார்.