சௌமியா அன்புமணி கைது...திமுக அரசின் கொடுங்கோல்போக்கு...சீமான் கண்டனம்!

 
seeman

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் நடத்த சென்ற சௌமியா அன்புமணியை கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடுவதற்கே அனுமதி மறுப்பதும், துண்டறிக்கை கொடுப்போரைக்கூட கைதுசெய்து ஒடுக்குவதுமான இச்செயல்பாடுகள் யாவும் ஏற்கவே முடியாத பாசிசப்போக்காகும்.


கடந்தகாலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டங்களை எல்லாம் தன்வயப்படுத்தி, அதனை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்து வாக்கரசியலில் இலாபமீட்டிய திமுக, ஆளுங்கட்சியானதும் எதிர்க்கட்சிகளை முற்றாகப் போராடவிடாமல் முடக்குவதும், அரச வன்முறைகளை ஏவிவிடுவதும் சனநாயகத்துரோகமாகும் என குறிப்பிட்டுள்ளார்.