திருமணம் முடிந்த மறுநாளே தற்கொலை- இளம்பெண் விபரீத முடிவு

ஆண்டிபட்டி அருகே திருமணம் முடித்து மறுவீட்டு நிகழ்விற்காக தனது தாய் வீட்டிற்கு கணவருடன் வந்திருந்த தனியார் பள்ளி ஆசிரியரான புதுமணப்பெண் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன். தேனி போக்குவரத்து கழக அலுவலகத்தில் துணை உதவியாளராக இருக்கும் இவரது மகள் சௌமியா (வயது 24). ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் சௌமியாவிற்கும் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பெங்களூரில் ஐடி துறையில் பணிபுரியும் பாலாஜி என்பவருக்கும், நேற்று முன்தினம் திருமணம் முடிந்த நிலையில் மறுநாள் மறு வீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு கணவர் பாலாஜியுடன் சௌமியா வந்திருந்தார்
இந்நிலையில் வீட்டிற்குள் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாக சென்று கதவை பூட்டி கொண்ட சௌமியா நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது வீட்டிற்குள் மின்விசிறி மாற்றும் கம்பியில் சேலையால் தூக்கிட்டு சௌமியா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ராஜதானி காவல்துறையினர், வழக்குபதிவு செய்து , பெண் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.