கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 
கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த புயல் வருகிற 30ம் தேதி கடலூருக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

school

இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்திருந்தனர். 


இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை 29 ஆம் தேதி மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார்  உத்தரவிட்டுள்ளார். கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.