உதயநிதியை கண்காணிக்கும் அன்பில் மகேஷ் ?- சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
உதயநிதியை கண்காணிப்பில் வைக்கிறாரா அன்பில் மகேஷ் ? என ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில், “இரு தினங்களுக்கு முன், துணை முதல்வர் உதயநிதியின் துணைச் செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். என்னதான் பால்ய தோழனாக இருந்தாலும், அதிகார போதை கண்ணை மறைக்கும். உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை ஒதுக்கப்படும் என்று பேச்சு அடிபட்ட சமயத்தில், தன்னுடைய ஆட்களாக மாநகராட்சிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று மகேஷ் காய் நகர்த்தி, அவர் பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர்தான் குமரகுருபரன் ஐஏஎஸ். இவர் அன்பில் மகேஷ் ஆளாக இருப்பதால்தான், துறையின் அமைச்சர் கே.என்.நேருவை மதிக்காமல், புதிய திட்டங்கள், கட்டுமானங்கள் குறித்து இவராக ட்விட்டரிலும், இதர சமூக வலைத்தளங்களிலும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். நேரு சொல்வது எதையும் மதிப்பது இல்லை.
துணை முதலமைச்சராக பதவி உயர்த்தப்பட்டாலும், உதயநிதிக்கு கூடுதல் துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், ஆர்த்தி ஐஏஎஸ் எதற்காக துணைச் செயலாளராக நியமனம் ? விசாரித்ததில், துணை முதல்வருக்கு ஏராளமான மனுக்கள் வருகிறதென்றும், அவற்றை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், ஐஏஎஸ் அல்லாத எத்தனையோ துணைச் செயலாளர்கள் தலைமைச் செயலகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
உதயநிதியை கண்காணிப்பில் வைக்கிறாரா அன்பில் மகேஷ் ?
— Savukku Shankar (@SavukkuOfficial) November 13, 2024
இரு தினங்களுக்கு முன், துணை முதல்வர் உதயநிதியின் துணைச் செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். என்னதான் பால்ய தோழனாக இருந்தாலும், அதிகார போதை கண்ணை மறைக்கும்.
உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை ஒதுக்கப்படும் என்று பேச்சு… pic.twitter.com/LxAxDjLGvI
ஐஏஎஸ்தான் வேண்டுமென்றால், “முதல்வரின் முகவரி” என்ற மனு வாங்கும் திட்டத்தை செயல்படுத்தியதில் அனுபவம் உள்ள ஷில்பா பிரபாகர் ஐஏஎஸ்ஸை நியமித்திருக்கலாம். அதை விடுத்து, ஏற்கனவே, “சமக்ர சிக்ஷா” திட்ட இயக்குநராக, அன்பில் மகேஷின் துறையான பள்ளிக் கல்வித் துறையில் இருக்கும் ஆர்த்தி ஐஏஸ்ஸை துணை முதல்வரின் துணைச் செயலாளராக நியமித்து, சமக்ர சிக்ஷா திட்டத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று உத்தரவு வருகிறதென்றால் என்ன காரணம் ? துணை முதல்வரின் செயலாளர் வேறொரு துறையின் அமைச்சரை சந்தித்தால் எதற்காக சந்திக்கிறார் என்ற கேள்வி எழும். சமக்ர சிக்ஷா இயக்குநர் ஆர்த்தி சந்தித்தால், துறையின் அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு என்று கூறலாம். இதன் மூலம், துணை முதல்வர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆர்த்தி மூலமாக அன்பில் மகேஷ் எளிதாக கண்காணிக்க முடியும் என்பதாலேயே இந்த நியமனம். தலைமைச் செயலகத்தில் power dynamics வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.