சத்தியமூர்த்தி தேவர் மறைவு - சசிகலா இரங்கல்!

 
sasikala

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனின் சகோதரர் சத்தியமூர்த்தி தேவர் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், சசிகலா  இரங்கல் தெரிவித்துள்ளார். 

sasikala

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், பசும்பொன் திருமகனார் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் மைத்துனர் மறைந்த மு.தங்கவேல் தேவர் அவர்களின் மகனும், பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவாலய அறங்காவலர் திருமதி.காந்திமீனாள் அவர்களின் சகோதரருமான த. சத்தியமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.


அன்பு சகோதரர் சத்தியமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.