கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி

 

கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பதிவான வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து, பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே கொரோனா இரண்டாம் பரவல் தொடங்கியுள்ளதால் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுகிறது. ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாத தேர்தல் ஆணையம் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, மொத்த வாக்காளர்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டிவருகிறது.

கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெறும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இதுவரை 7,255 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 2,743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர், பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம்” எனக் கூறினார்.