கொரோனா எதிரொலி: வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம்- தேர்தல் ஆணையர்

 

கொரோனா எதிரொலி: வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம்- தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுகள் மே. 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

கொரோனா எதிரொலி: வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம்- தேர்தல் ஆணையர்

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய தாமதமாகலாம். ஆகையால் மே 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவை அறிவிக்க திட்டமிட்டப்பட்டிருக்கிறோம். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா பரவலால் வாக்கு எண்ணிக்கையை ஒத்துவைப்பது குறித்து தற்போது வரை ஆலோசனை நடத்தவில்லை” என தெரிவித்தார்.