ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வெற்றிப்பெற்றா? சத்ய பிரதா சாகு பதில்

 

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வெற்றிப்பெற்றா? சத்ய பிரதா சாகு பதில்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் மாதவராவ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை திடீரென உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வெற்றிப்பெற்றா? சத்ய பிரதா சாகு பதில்

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும், ஒருவேளை காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றிப்பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “ ஸ்ரீவில்லிபுத்தூரி இடைத்தேர்தல் நடந்தால் காங்கிரஸ்தான் போட்டியிடும். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்?” ஏன கேள்வி எழுப்பினார்.