தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை- சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?: சசிகாந்த் செந்தில் எம்.பி.

 
SASIKANTH

'திராவிட நல் திருநாடும்'  என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டால், தமிழின் பெருமைகளையும், திராவிடத்தின் வரலாற்றையும் மறைத்துவிடமுடியுமா? -சசிகாந்த செந்தில் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட’திராவிட நல்திருநாடு’... ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை

சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்றுவரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் சசிகாந்த செந்தில் எம்.பி தனது எக்ஸ் தளத்தில், “ஆளுநர் ரவி அவர்கள் பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது திராவிட நல் திரு நாடும்  என்ற வார்த்தையை  தவிர்த்துள்ளார். சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்று நினைக்கிறார் போல. இது போன்ற செயல்களால்  தமிழின் பெருமையையும் திராவிடத்தின் வரலாற்றையும் மறைத்துவிடமுடியாது என்பதை ஆளுநர் உணரவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.