மக்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக பேசுகிறேன்: சசிகலா
Aug 13, 2024, 19:01 IST1723555892202
மக்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக பேசுகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கு மேளதாளங்களுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, “மக்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக பேசுகிறேன். திமுக அரசு செய்யும் தவறுகளை எடுத்துக்காட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். நெல்லையில் 4 ஆண்டுகளில் 240 கொலைகள் நடந்துள்ளன. சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை. மக்களுக்கு நல்லது செய்யாமல் நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் சண்டை போடுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.