நேரடியாக களத்தில் இறங்கிய சசிகலா! ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

 
sasikala

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து வந்தது முதல் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து  ஒதுங்கியிருந்த சசிகலா, கடந்த சில நாட்களாக அறிக்கை விடுவது, சுற்றுப்பயணம் மேற்கொள்வது, கட்சி தொண்டர்களிடம் பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் முதன்முறையாக சசிகலா மக்களை, நேரடியாக சந்தித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை தேனாம்பேட்டை கிரியப்பா சாலை பகுதி மக்களுக்கு சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கடந்த ஒரு வாரம் பெய்த கனமழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. பொதுமக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும். தமிழகத்தில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.