பாஜகவை தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியாக அறியப்படச் செய்தவர் அண்ணாமலை- சரத்குமார்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களது நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேறி, வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன் என பாஜக உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தமிழக மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களது நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேறி, வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தமிழக மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களது நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேறி, வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) August 27, 2024
பொறுப்புமிக்க,…
பொறுப்புமிக்க, அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு தேசப்பணி ஆற்ற விரும்பியவர். மூத்த நிர்வாகிகளை அரவணைத்து, மிகக் குறுகிய காலத்தில்,தமிழகத்தில் பாஜக எனும் கட்சியை முக்கிய எதிர்கட்சியாக அறியப்படச் செய்தவர். இவைகள் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மனதிலும் மிக முக்கியமான இடத்தை இந்த இளம்வயதிலேயே ஈர்த்து வைத்திருப்பவர். நேர்மையிலும், உழைப்பிலும், தன்னம்பிக்கையிலும், தேசப்பணியிலும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களது வெளிநாட்டுப் பயணமும், கல்வியும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.