2026ல் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்- சரத்குமார்

2026-ல் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும், மத்தியில் உறுதியான ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலருவதற்காக காலம் கனிந்துகொண்டு வருவதாக சரத்குமார் கூறினார்.
தென்காசியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்தன் அய்யாசாமி அறிமுக விழா நடந்தது. இதில் ன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “இங்கே பேசுவதற்கு ஒன்றுமில்லை. செயல்பாடு தான் முக்கியம். உங்கள் பணி உங்களால் முடிந்தவரை ஒரு பூத்திருக்கு 20 பேரை தென்காசி பட்டவரை 327 பூத்கள் உள்ளன. ஒரு பூத்திற்கு 20 பேரை சேர்த்திங்கண்ணா அது அறுபதாயிரம் ஆகிவிடும். அந்த செயல்பாட்டிலே மக்களை நீங்கள் வயப்படுத்தினால் நமது வெற்றி எளிதாகிவிடும். மோடி ஜியின் நல்லாட்சியின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். திடீரென்று உங்களை பிஜேபி காரங்க, சும்மா நடந்து போனாலே பெண்ணை பின் தொடர்ந்து சென்றான் என்று கைது செய்து விடுவார்கள். 2026-ல் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும், மத்தியில் உறுதியான ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலருவதற்காக காலம் கனிந்துகொண்டு வருகிறது.
2026 தேர்தல் ஒரு அக்னி பரீட்சை 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் இன்று நீங்கள் சென்றதுமே 2026 தேர்தலுக்கான வேலையை தொடங்க வேண்டும். 16 ஆண்டுகள் சமத்துவ மக்கள் கட்சி இந்த கட்சியை துவங்கிய நடத்தி இருக்கின்றேன். 1996ல் அதிமுக ஆட்சியை எதிர்த்து 40 நாட்கள் பிரச்சாரம் செய்திருக்கிறேன். பலர் இப்போது புதிதாக பேசி அரசியலுக்கு வருகின்றனர். என்னைப் போல அரசியல் அறிவு கொண்டவர்கள் கலைத்துறையில் யாரும் இல்லை. மோடியின் அருமை காஷ்மீரில் உள்ளவர்களுக்கு தெரிகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதும் மோடி வாழ்க என்கிறார். மோடியின் அருமை ட்ரம்ப்க்கு தெரிகிறது. ஆனால் இங்கு உள்ள கடை கோடி மக்களுக்கு அவரைப் பற்றி தெரியவில்லை” என்றார்.