”விமான சாகச நிகழ்வில் 5 பேர் பலியான போது யாரை கைது செய்தோம்”- அல்லு அர்ஜூனுக்கு சரத்குமார் ஆதரவு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் மாவட்ட பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.ஞானதாஸ் தலைமை வகித்தார். பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, கிறிஸ்துவ மதபோதகர்களுக்கு கிறிஸ்துமஸ் மரத்தையும், இசுலாமிய பெண்களுக்கு புர்கா வழங்கினார். பின்னர் அனைத்து சமுதாய மக்களும் சரத்குமாருக்கு, பகவத்கீதை, பைபிள், மற்றும் குரானை வழங்கினர்.
அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 10க்கும் மேற்பட்டோரை பாஜக கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், “ன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் என்னுடைய சிறந்த நண்பர், பாராளுமன்றத்தில் ஒன்றாக இருந்தோம். தமிழகத்தில் தற்போது முன்பகை காரணமாக யாரை எப்போது வெட்டுவார்கள் என்று பயத்துடனே பொதுமக்கள் பயணிக்கின்றனர். குற்றம் செய்தவர் இவர் தான் என்று சிசிடிவி பதிவு காட்சிகள் மூலம் தெரிந்த பின்னர், தீர விசாரணை செய்து உடனடியாக தண்டனை வழங்கினால் தான் சட்ட ஒழுங்கு நிலைநாட்ட முடியும், நாடு அமைதியாக இருக்கும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்ளுகிறேன். மேலும் ஓர் விழாவில் கூட்டம் வரும் என போலீசாருக்கு தெரியும், அளவுக்கு அடங்காமல், கூட்டம் வந்ததற்கு, அல்லு அர்ஜூன் எப்படி பொறுப்பேற்பார்? அவரை கைது செய்தது எவ்வித நியாயமும் கிடையாது. வீர தீர ஏர் சாகசம் நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தார்கள். அப்போது யாரை கைது செய்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.