கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி - நலம் பெற சரத்குமார், ஸ்ரீபிரியா வாழ்த்து

 
ll

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கமல்ஹாசன் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று நடிகர் சரத்குமார்,  நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

kl

 நடிகர் கமலஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் .  லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதை அடுத்து கமல்ஹாசன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.   அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகத்தினையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

sa

 இப்படி பரபரப்பாக இயங்கிவரும் கமல்ஹாசனுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.   இதுகுறித்து அவரே,   ‘’அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

sri

 கமல்ஹாசன் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று நடிகர் சரத்குமார் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.