திரைப்படங்களில் ஒருவரை உயர்த்திக் காட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்துவது சரியல்ல- சந்தானம்

 
santhanam

ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியல்ல என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

santhanam

ஜெய் பீம் படம் குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் நடிகர் சந்தானம், சூர்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். சந்தானம் நடிப்பில் நவம்பர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள  சபாபதி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சந்தானம், “எந்த படமாக இருந்தாலும் படத்தின் கருத்தை தூக்கி பேசலாம், ஆனால் யார் மனதையும் துன்புறுத்துவது போல் தாழ்த்திப் பேசக் கூடாது. திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல. சாதி மதங்களைக் கடந்து திரையரங்கிற்கு இரண்டு மணி நேரம் படம் பார்க்க மக்கள் வருகிறார்கள். அந்த இடத்தில் இது தேவையற்ற ஒன்று. பட விளம்பர வேலைகளில் பிசியாக இருந்ததால் #westandwithsuriya ஹாஷ்டாக் ட்ரெண்டானது குறித்து தனக்கு எதுவும் தெரியாது.

திரைப்படங்களில் யாரையும்  தாழ்த்திப் பேசவேண்டாம். அதை சரிப்படுத்த வேண்டும். வரும்காலத்தில் இளைஞர்களுக்கு நாம் நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும். திரையரங்கிற்கு வரும் மக்களுக்கு படம் விருந்தாக இருக்க வேண்டும் என்பதே தன் நோக்கம். தன் பக்கம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.