தன்னைச்சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து நடுவே ஜீவசமாதி அடைந்த சாணார்பட்டி சாமியார்

 
ப

சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதன் நடுவே அமர்ந்து அந்த மணல் மூட்டையில் இருந்து மணல் தானாகவே தன்மேல்  விழும்படி செய்துவிட்டு தான் திட்டமிட்டபடியே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார் சாணார்பட்டி சாமியார். 

 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்த ஆவிப்பட்டியைச் சேர்ந்தவர் கரந்தமலை.   75 வயதான இந்த முதியவர் மனைவியுடன் வசித்து வந்தவர்.  கரந்தமலை மனைவி கடந்த 2001ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார்.   இவரது மூன்று மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.   வீட்டில் தனியாக இருந்த கரந்தமலை ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்.

ச

இதை அடுத்து நீண்ட முடியை வளர்த்துக்கொண்டு வீட்டின் அருகே இருக்கும் பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வந்துள்ளார்.  குறி சொல்லியும் வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவரை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலையில் அவர் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது.

 இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சாணார்பட்டி போலீசுக்கு புகார் அளித்துள்ளனர்.  போலீசார் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து நடுவில் ஜீவசமாதி அடையும் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.   அந்த மூட்டைகளில் இருந்து தானாகவே மணல் தன்மேல் விழும் வகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.   உயிர் இழந்து அழுகிய நிலையில் அவர் கிடந்திருக்கிறார்.  அவரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.