பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சபரிமலை... தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

 
சபரிமலை

சபரிமலை பம்பையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பம்பையில் செயல்பட்டு வரும் ஏழு ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களை நிலக்கல்லுக்கு இடம் மாற்ற  தேவசம்போர்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

சபரிமலை


சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறத.  தினமும் ஒரு லட்சத்தை நெருங்குவதால் பம்பை சன்னிதானம் பெரிய நடை பந்தல் மரக்கூட்டம் ஆகிய பகுதிகளில் பக்தர்களின் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.  இதனால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது பம்பையில் செயல்பட்டு வரும் 10 ஸ்பாட் புக்கிங் கவுனர்களில் ஏழு கவுண்டர்களை நிலக்கடலுக்கு மாற்ற தேவசம்போர்டு அதிகாரிகளும் காவல்துறையினரும் முடிவு செய்துள்ளார்கள். பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் 14 ஆம் தேதி மாலையில்  நடைபெற உள்ள நிலையில், 12, 13, 14, ஆகிய தேதிகளில் புக்கிங் குறைக்கவும் தேவசம்போர்டு ஆலோசனை நடத்திவருகிறது.

இதே போல் பாரம்பரிய பாதைகளான பெருவழி சத்திரம் புல் மேடு வழியாக வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பக்தர்களை அனுமதிக்கும் நேரத்தை குறைக்கவும் தேவசம்போலும் வனத்துறையினரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று முதல் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையும் 5000 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகரஜோதி அன்று கூடுதல் காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.