புதுச்சேரியில் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 நிவாரணம்

 
rangasamy

புதுச்சேரியில் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரணம் -  முதலமைச்சர் ரங்கசாமி - Polimer News - Tamil News | Latest Tamil News |  Tamil News Online ...

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி பெய்துவருகிறது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பயிர்கள் சேதமாகின. பல்வேறு வீடுகளும் இடிந்துவிழுந்தன,இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் என்.ரங்கசாமி, “மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25,000, பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், உயிரிழந்த ஆடுகளுக்கு ரூ.5 ஆயிரம், மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். இதர பயிர்களுக்கும், அதிகாரிகளிடம் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும்” என அறிவித்துள்ளார்.

இதேபோல் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி, உதவியாக தலா ரூ.1,000 வழங்க ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.