வேலையில்லா இளைஞர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.4 கோடி- அமலாக்கத்துறை விசாரணை

 
க்ஷஃப்

திருத்தணி அருகே வேலையில்லா இளைஞர்களின் வங்கி கணக்கில் 4 கோடி  ரூபாய் வந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் அந்த இளைஞர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்திய பின் அவர்களை அமலாக்கத் துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

pt desk

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குமாராஜிபேட்டை காலனியைச் சேர்ந்த  குப்பன் என்பவரின் மகன் தமிழரசன்(25),  மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த   ஐயப்பன் என்பவரின் மகன்  அரவிந்தன்(26), ரத்தினம் என்பவரின்  மகன் பிரகாஷ்(25) ஆகிய மூன்று பேரும் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தற்காலிக  ஊழியர்களாக பணியாற்றி ஒரு மாதத்திற்கு முன்பு  வேலையை விட்டு நின்று விட்டனர்.  இந்நிலையில், வாலிபர்கள் மூன்று பேர் வங்கி கணக்கில் சுமார்  4 கோடி ஆன்லைன் பணமாற்றம் நடைபெற்று உள்ளதாக அமலாக்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து அமலாக்கத்துறையினர் 20க்கும் மேற்ப்பட்டோர் 5 வாகனங்களில் நேற்று காலை  குமாராஜ்பேட்டை காலனி, மோட்டூரில்  உள்ள வாலிபர்கள் வீடுகளுக்கு சென்றனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்  பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். இளைஞர்களின் மூன்று பேரில் வீடுகளில் தனி தனித்தனி குழுக்களாக சென்று  சோதனை நடத்தினர்,  இளைஞர்களின் வங்கி கணக்கு விவரங்கள், அவர்களின்  குடும்ப பின்னணி, தொழில்,  தொடர்புகள், பண பரிமாற்றம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் அவர்களை  துருவி துருவி விசாரணை செய்து விவரங்கள் சேகரித்தனர்.  

தமிழரசன் தந்த தகவலின் பேரில் கிருஷ்ணன் என்பவரின் மகள்கள்  ஜானகி, அருணா ஆகியோரிடம் நேற்று காலை முதல் இரவு முழுவதும் விடிய விடிய பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் தனி அறையில் வைத்து  விசாரணை நடத்தினர். முடிவில் தமிழரசன், அரவிந்தன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய 4 வாலிபர்களை கைது செய்த அமலாக்கத் துறையினர் பெங்களூர் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தகவலானது வெளியாகி உள்ளது. குடிசை வீடுகளில் வசித்து வரும் வாலிபர்கள்  சென்னையில் வேலைக்காக  அஜ்மால் என்பவரை சந்தித்ததாகவும், அவர் மூலம் மூன்று பேருக்கு புதிதாக வங்கி கணக்கு  தொடங்கப்பட்ட  நிலையில் மூன்று பேர் வங்கி கணக்கில் தனித்தனியாக மொத்தம்  ரூ. 4 கோடி  ஆன்லைன்  பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதாகவும் அமலாக்கத் துறையினர் கண்டறிந்தனர். 

அஜ்மல் என்பவர் ரூபாய் 8 கோடி அளவுக்கு ஹவாலா பணம் மோசடி தொடர்பாக ஆந்திர மாநிலம் சீராளா காவல் நிலையத்தில் புகார் பேரில் விசாரணை நடத்தி போலீசார், அஜ்மல் என்பவர் இளைஞர்கள் மூன்று பேர் வங்கி கணக்கில் 4 கோடி பரிமாற்றம் செய்தது உறுதிப்படுத்தி அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நேரில் ஆஜராக இளைஞர்களுக்கு மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த மூன்று இளைஞர்களும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் பெங்களூரு,  புதுச்சேரி,  மும்பை ஆகிய  பகுதிகளிகளிருந்து  20 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே வந்து பணம் பரிமாற்றம் குறித்து தீவிர விசாரணையில்  ஈடுபட்டு 4  பேரை கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருப்பது   பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.