மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

 
mkstalin

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோவில்மட்டம் என்ற இடத்தில் அரசுப் பேருந்தின்மீது உயர் மின்அழுத்த கம்பி உரசிய விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை-1 கிராமத்தில் இன்று (16.08.2024) காலை சுமார் 06.10 மணியளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி நான்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கோவில்மட்டம் என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது உயர் மின்அழுத்தக் கம்பி பேருந்தின்மீது உரசிய விபத்தில் நான்கு பயணிகள் மற்றும் ஓட்டுநர் பேருந்துப் படிக்கெட்டின் வழியாக கீழே இறங்கி தப்பித்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அரசுப் பேருந்து ஓட்டுநர் திரு.பிரதாப் (வயது 42) த/பெ. தேவராஜ் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில், உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் திரு.பிரதாப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.