பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ரூ.2 கோடி வாழை மரங்கள் சேதம்!

 

பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ரூ.2 கோடி வாழை மரங்கள் சேதம்!

ஈரோடு

பவானி அருகே சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டிக்கொட்டை தாளபாளையம், கூனாக்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறு, குறு விவசாயிகள் செவ்வாழை, கதலி, நேந்திரம் உள்ளிட்ட வாழை ரகங்களை பயரிட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், 50 ஏக்கர் பரப்பளவிலான 50 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ரூ.2 கோடி வாழை மரங்கள் சேதம்!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், கதலி, செவ்வாழை, நேந்திரம் வாழை ரகங்களை பயிடப்பட்டிருந்து. நேற்றிரவு பெய்த கனமழையால் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடி சரிந்து விழுந்துள்ளது. இதனால் ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில், இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை வேளாண்மை துறையினர் ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.