சாலை விபத்து - நடிகர் ஜீவா புகார்

 
விபத்துக்குள்ளான கார்... நூலிழையில் உயிர் தப்பிய ஜீவா!

கள்ளக்குறிச்சி அருகே நடிகர் ஜீவா பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருசக்கர வாகன ஒட்டுநர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம் நோக்கி நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் தனி காரில் சென்று கொண்டிருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் புறவழிச்சாலையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது நடிகர் ஜீவா ஒட்டிச் சென்ற கார் மோதாமல் இருக்க முயன்ற போது நடிகர் ஜீவாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி எதிர் திசையில் சென்று நின்றது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். 

இந்நிலையில் சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா ஓட்டிச் சென்ற காரின் குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டன் என்பவர் மீது ஜீவா சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரில் விபத்திற்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டி மணிகண்டன் மீத் நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். இதையடுத்து அவர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.