அண்ணா பல்கலை.யில் ஆளுநர் நாளை ஆய்வு

 
d

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

Chennai student sexual assault - Anna University student rape protests  erupt - India Today

அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

Tamil Nadu Governor orders withdrawal of Annamalai University VC  appointment | Tamil Nadu News - News9live

இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை பகல் 12.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.