"நான் பாவாடையும் இல்ல, சங்கியும் இல்ல; நான் இந்தியன்"- ஆர்.ஜே.பாலாஜி

 
rj balaji

ஒரு படத்திற்கு கிடைக்கும் எதிர்மறையான விமர்சனங்களை பார்க்கும் போது ரொம்ப பயமாக இருக்கிறது.... என்னை பாவடைனு சொல்லி திட்டுறாங்க. நான் சங்கியும் இல்லை, பாவாடையும் இல்லை என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன் நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு பேசினர். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, “முதல் இயக்குநர், ஒளிப்பதிவாளர்கள் என இந்தப் படத்தோட டீம்முக்கு பெரிய பயணம் இருக்கிறது. இன்னும் இந்தப் படத்தை பார்க்க வில்லை. இதுக்கு காரணம் குழுவினர் மீது இருந்த நம்பிக்கை. என்னுடைய ஷார்ட் கேரியரில் முக்கியமான படம் இது. சித்தார்த் விஸ்வநாதனுக்கு நிறைய ஹீரோஸ் கால் பண்ணிட்டாங்க. இவங்க எல்லோருக்கும் எனக்கு ப்ரெண்ட் ஆனா யாரும் கூப்பிடல. இந்த டீம்மா நிறைய கலாய்ச்சு இருக்கேன். ஏன்னா, நிறைய இங்கிலீஷ்ல பேசுவாங்க. நான் டைரக்‌ஷன் பண்ற படத்துக்கு இந்த டீம்ல இருந்து நிறைய பேரை எடுத்துகிட்டேன். 

RJ Balaji: `யாரையும் டார்கெட் வச்சு அடிக்காதீங்க!' - ஆர்.ஜே.பாலாஜி சொல்வதென்ன?

இயக்குநர் கிரிக்கெட் விளையாடுன காலத்துல இருந்து தெரியும். பல்லவி சிங் என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட். படம் வந்ததுக்கு அப்புறம் யார் வேண்டுமானாலும் எப்படி வேணாலும் விமர்சனம் பண்ணலாம். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவது இல்லை. எனக்காக ட்ரீம் வாரியர் இந்தப் படம் வாங்கவில்லை. நன்றாக இருப்பதால் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள். ஒரு படத்திற்கு கிடைக்கும் எதிர்மறையான விமர்சனங்களை பார்க்கும் போது ரொம்ப பயமா இருக்கு! என்னை பாவடைனு சொல்லி திட்டுறாங்க. நான் சங்கியும் இல்லை, பாவாடையும் இல்லை. அரசியல் கட்சிகளின் ஐடி விங் அரசியல் பண்ணுங்க... எதுக்கு சினிமாகுள்ள வர்றீங்க? நான் பாவாடையோ சங்கியோ அந்து டீமோ இந்த டீமோ அல்ல… இந்த டீம் ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து பார்த்து உங்களது விமர்சனங்களை தெரிவியுங்கள்” என்றார்.