"கருப்பு பார்ட் 2 கண்டிப்பாக வரும்"- ஆர்ஜே பாலாஜி

 
s

கருப்பு திரைப்படத்தின் பார்ட் 2 கண்டிப்பாக வரும் என கருப்பு திரைப்பட இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். 

Image

நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இன்று நெல்லை முத்துராம் தியேட்டரில் வெளியான கருப்பு திரைப்படத்தை பார்ப்பதற்காக  இயக்குனர் ஆர்ஜே பாலாஜியுடன் பட குழுவினர் வருகை தந்திருந்தனர். ஆர்ஜே பாலாஜி திரையரங்கு உள்ளே சென்று ரசிகர்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்தார் கலந்துரையாடினார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜே.பாலாஜி, “நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றதால் சினிமாவில் வெற்றிடம் ஏற்படவில்லை. சூர்யா போன்ற மிகப்பெரிய நடிகர்கள் அதனை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கருப்பு திரைப்படத்தின் பார்ட் 2 கண்டிப்பாக வரும். அரசியலை மையப்படுத்தி அந்த பகுதி இருக்கும் என்ன கதை என்பது எழுதும் போது தான் தெரியும். கடவுள் மீது நம்பிக்கை வைத்து அதிகமானோர் இந்த திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து செல்கிறார்கள். சென்சார் போர்டின் செயல்பாடு எங்கள் படத்திற்கு அருமையாக இருந்தது. எங்களுக்கு நல்ல முறையில் உதவினார்கள். பொள்ளாச்சி மாசாணி அம்மனை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பின்னர் ஹை கோர்ட் மஹாராஜா குறித்த தகவலும் கிடைக்கப்பெற்றது. வீட்டில் பிராத்தனைகள் இருந்தபோது சூர்யா போன் செய்து எனக்கு கதை இருக்கிறதா என்று கேட்டார் உடனடியாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. கடவுள் மறுப்பு கொள்கை குறித்து திரைப்படங்களில் பேசுபவர்கள் பொதுமக்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றுகிறது” என்று கூறினார்.