7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை

 
rain

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதேபோல் புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்  மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும் அதி கனமழை எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.