தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

 
ttn


சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

rain

வங்கக்கடலில் கடந்த 13ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறாது  என்று நேற்றுவரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்று உள்ளது . இதன் காரணமாக  பலத்த காற்றுடன் சென்னையில் பட்டினம்பாக்கம் ,மெரினா ,மயிலாப்பூர் ,மந்தைவெளி ,ஈக்காட்டுதாங்கல் ,அசோக்நகர் ,சைதாப்பேட்டை ,ராயப்பேட்டையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

rain

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 வட கடலோர மாவட்டங்களுக்கு அதீத கன மழைக்கான எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் தற்போது கனமழை பெய்து வரும் சூழலில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.