“டாஸ்மாக்கில் ரசீது கட்டாயம்” : கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

 

“டாஸ்மாக்கில் ரசீது கட்டாயம்” : கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“டாஸ்மாக்கில் ரசீது கட்டாயம்” : கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ‘டாஸ்மாக்’ கடைகளில் வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும்.டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது; அவ்வாறு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

“டாஸ்மாக்கில் ரசீது கட்டாயம்” : கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்று மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் டாஸ்மாக்’ கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனை மொத்தமாக செய்வது கண்டறியப்பட்டால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.