“திமுகவின் அஜண்டாவாக செங்கோட்டையன் செயல்படுகிறார்”- ஆர்.பி. உதயகுமார்
தங்களுக்கு அம்மா கொடுத்த அடையாளத்தை தொலைத்துவிட்டு,தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டு, தங்களுக்கு முகவரி கொடுத்த இயக்கத்தை சிதைப்பதற்கு வியூகம் அமைத்துக் கொண்டு வீதியிலே அலைகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவை அழிக்கும் வியூகத்தோடு பசும்பொன்னில் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். பசும்பொன்னில் நடந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதியவர் செங்கோட்டையன். அதனால்தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களால் செங்கோட்டையன் பூஜியம் ஆக்கப்படுவார். முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கே சென்று சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார்.திமுகவின் அஜண்டாவை செயல்படுத்த அவர்களின் B டீமாக செயல்படுபவர்களை அதிமுக தொண்டர்கள் நம்ப மாட்டார்கள். தங்களுக்கு அம்மா கொடுத்த அடையாளத்தை தொலைத்துவிட்டு,தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டு, தங்களுக்கு முகவரி கொடுத்த இயக்கத்தை சிதைப்பதற்கு வியூகம் அமைத்துக் கொண்டு வீதியிலே அலைகிறார்கள்.
தேவர் ஜெயந்தி விழாற்காக வணங்க வந்த பசுபொன் பூமியில் திட்டமிட்ட சந்திப்பு நாடகத்தை அரங்கேற்றி, அங்கே ஒரு கருப்பு வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்கள். லட்சியப் பாதையில் இருந்து விலகிவிட்டார் செங்கோட்டையன். திமுகவின் அஜண்டாவாக செங்கோட்டையன் செயல்படுகிறார்” என்றார்.


