பாஜகவுடன் ஒட்டி உறவாடுவதெல்லாம் உதயநிதியை துணை முதல்வராக்கதான்- ஆர்.பி.உதயகுமார்
Aug 19, 2024, 16:50 IST1724066437317
கலைஞருக்கு நூறு ரூபாய் நாணயம் வெளியிட்டு விழா ஒன்றிய அமைச்சரை வைத்து நடத்தியது, உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கான ஒத்திகை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. கல்லுப்பட்டியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கலைஞரின் நூறு ரூபாய் நாணயம் வெளியிடுவதற்கு ஒன்றிய அமைச்சரை வரவழைத்தது, உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கான ஒத்திகை தான். கலைஞரின் நூற்றாண்டு விழா நாணயத்தை வெளியிடும் விழாவை விட உதயநிதியை துணை முதல்வராக்குவது முதல்வருக்கு முக்கியத்துவமாக உள்ளதால் ஒன்றிய அமைச்சர், பாஜக தலைவர்கள் அனைவரையும் முதல்வர் ஸ்டாலின் அழைத்துள்ளார். திமுக, பாஜகவிடம் அடிமை சாசனம் போய் உள்ளது” என்றார்.