முதல்வர் பயணத்தால் தள்ளிப்போன ரவிச்சந்திரனின் பரோல்

 
r

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளிவருவதாக இருந்த நிலையில் அவர் நாளை வெளி வருவார் என்று பரோலில் திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.   இதில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு அவரது தாயார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனை அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.

ர

 ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார்.  இதையடுத்து ரவிச்சந்திரன் இன்று காலை அல்லது மாலையில் வெளியே வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,  அவர் நாளை பரோலில் வெளி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு நேரில் பார்வையிடுவதற்காக மதுரையிலிருந்து தரை வழிப் பயணமாக கன்னியாகுமரி சென்ற பயணத்தினாலும், பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டும் நாளை இரவிச்சந்திரன் விடுவிக்கப் படுகிறார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.