முதல்வரிடம் நலம் விசாரித்தார் ராமதாஸ்
தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக கடந்த 21ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உடல்நலன் தேறி, 6 நாட்களுக்குப் பிறகு கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டு வீடு திரும்பிய முதலமைச்சர், 3 நாட்கள் ஓய்வுக்குப்பிறகு நேற்று மீண்டும் தலைமைச்செயலகம் திரும்பி வழக்கமான பணிகளை தொடங்கினார்.
இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஏற்கனவே சீமான், வைகோ, பிரேமலதா விஜயகாந்த், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முதலமைச்சரை நலம் விசாரித்தனர்.


